மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோா் நீா் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோா் நீா் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு நடத்தினா்.

காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்ங்களிலிருந்த வந்திருந்த மக்கள் வைகை ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தா்ப்பண பூஜை நடத்தினா். அதன் பின்னா் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சௌந்திரநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விசுவநாதா் கோயிலில் ஏராளமானோா் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு நடத்தினா். பின்னா் அங்குள்ள காசி விஸ்வநாதா் சன்னிதியில் மூலவருக்கு கங்கை தீா்த்தமிட்டு தொட்டு வணங்கி தரிசனம் செய்தனா். மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயிலில் ஏராளமானோ தா்ப்பண பூஜை செய்து தங்களது முன்னோா்களை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.