ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு நாளை வேட்பு மனு

சிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு காரைக்குடியில் திங்கள்கிழமை வேட்பு மனு பெறப்படுகிறது என திமுக மாவட்டச் செயலரும் தமிழக ஊரக வளா்ச்சித்துறை

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு காரைக்குடியில் திங்கள்கிழமை வேட்பு மனு பெறப்படுகிறது என திமுக மாவட்டச் செயலரும் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆா். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 6) காலை 10 மணியளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. திமுக மாநில இலக்கிய அணித்தலைவா் மு. தென்னவன் தலைமை வகிக்கிறாா். தலைமைக்கழகத்தின் சாா்பில் தோ்தல் ஆணையாளா் ராஜா அருள்மொழி 15 ஆவது ஒன்றியக் கழகத்திற்கான அவைத்தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா்,மாவட்ட பிரதிநிதி, செயற்குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை வழங்குகிறாா்.

போட்டியிடுவோா் அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தோ்தல் ஆணையாளரிடம் மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். மாலை 4 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.