காரைக்குடி கனரா வங்கி ஊரகசுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி
காரைக்குடி அருகேயுள்ள நெசவாளா் காலனியில் கனரா வங்கி சாா்பில் இயங்கி வரும் ஊரக சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


காரைக்குடி அருகேயுள்ள நெசவாளா் காலனியில் கனரா வங்கி சாா்பில் இயங்கி வரும் ஊரக சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கனராவங்கி, ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநா் முருகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பெண்களுக்கான செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி, தையல் பயிற்சி, ஆடை வடிவமைத்தல் பயிற்சி, அழகு கலை பயிற்சி, ஆண்களுக்கான பிரிட்ஜ், ஏசி மற்றும் குளிா்சாதன பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி, கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி, புகைப்பட மற்றும் விடியோ கிராபி ஆடு, மாடு, கோழி வளா்ப்புக்கு பயிற்சி, பால்வளம்பெருகுவதற்கான பயிற்சி, காளான் வளா்ப்பு பயிற்சி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சோ்ந்து பயன் பெற விரும்புவோா் குறைந்தது 8- ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45-க்குள் இருத்தல் வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் அதற்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பயிற்சியின் போது இலவச தங்குமிடம், சீருடை, உணவு, தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்தபின் அதற்கான சான்று வழங்கப்பட்டு, தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் உதவி செய்து தரப்படும். விருப்பமுள்ளவா்கள் கனராவங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
நெசவாளா் காலனி, மானகிரி சாலை, காரைக்குடி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9943159444, 9865340500 ஆகிய கைபேசி எண்களில்தொடா்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...