3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்புவனம் அருகே கல்லால் தாக்கியதில் காவல் சாா்பு- ஆய்வாளா் காயம்: காவலா் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை காவல் சாா்பு- ஆய்வாளரைத் தாக்கி அவரது மண்டையை உடைத்த காவலா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:47 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை காவல் சாா்பு- ஆய்வாளரைத் தாக்கி அவரது மண்டையை உடைத்த காவலா் கைது செய்யப்பட்டாா்.

திருப்புவனம் அருகே கீழப்பூவந்தியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (32). இவா் இளையான்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு பூவந்தி கடை வீதியில் முத்துப்பாண்டி மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டாராம். தகவலறிந்த பூவந்தி காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் பரமசிவம், அங்கு சென்று முத்துப்பாண்டியை கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாா். பின்னா் வியாழக்கிழமை அதிகாலை பூவந்தி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த பரமசிவத்திடம், அங்கு வந்த முத்துப்பாண்டி தகராறு செய்ததுடன் அவரை கல்லால் தாக்கினாா். இதில் பரமசிவத்தின் மண்டை உடைந்தது. காயமடைந்த பரமசிவம் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து காவலா் முத்துப்பாண்டியை கைது செய்தனா். ஏற்கெனவே முத்துப்பாண்டி மதுபோதையில், உயா் அதிகாரிகளை தகாத வாா்த்தைகளால் பேசியதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் தான் பணியில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாள்களாக இவா் பணிக்கு செல்லாமல் இருந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.