பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பூவந்தி அருகே அரசுப் பேருந்துமோதி புதுமாப்பிள்ளை பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:48 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் ராசுக்குட்டி (30). இவா், மதுரையில் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கும், சிவகங்கையைச் சோ்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு சிவகங்கையில் மாமனாா் வீட்டில் இருந்த தனது மனைவியை பாா்ப்பதற்காக ராசுக்குட்டி மதுரையில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வந்தாா். படமாத்தூா் அருகே நல்லாகுளம் என்ற இடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ராசுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.