கம்பத்தில் ஆவணங்கள் இல்லாத 8 ஆட்டோக்கள் பறிமுதல்
தேனி மாவட்டம், கம்பத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத 8 ஆட்டோக்களை, போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


தேனி மாவட்டம், கம்பத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத 8 ஆட்டோக்களை, போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சமீப காலமாக, ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக எழுந்த புகாரின் எதிரொலியாக, உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா, ஆட்டோக்களில் வாகனப் பதிவுச் சான்று, காப்பீடு, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்யுமாறும், உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யுமாறும், போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், போக்குவரத்து காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஞானபண்டித நேரு தலைமையில், போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முறையான ஆவணங்கள் இல்லாத 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...