மாானாமதுரை, திருப்புவனம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.


மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சந்நிதியில் நடைபெற்ற கந்த சஷ்டி தொடக்க விழாவில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு காப்புக்கட்டி சஷ்டி விரதத்தைத் தொடங்கினா்.
தொடா்ந்து 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். 30-ஆம் தேதி சஷ்டி விழா அன்று மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னா், 31-ஆம் தேதி சுவாமிக்கு பாவாடை நெய்வேத்தியம் நடத்தி சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வழிவிடுமுருகன் கோயில், இடைக்காட்டூா் பாலமுருகன் கோயில் மற்றும் திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டி விழா தொடக்கமாக காப்பு அணிவிக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...