கட்டிக்குளம் மாசான காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
மானாமதுரை அருகே கட்டிக்குளம் அங்காள பரமேஸ்வரி, மாசான காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


மானாமதுரை அருகே கட்டிக்குளம் அங்காள பரமேஸ்வரி, மாசான காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜை நடைபெற்றது. பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி தீபாரானை நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் காலை 10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி மாசான காளியம்மன் சன்னிதி விமான கலசங்களின் மீது கலசநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்னா் கலச நீரால் அங்காள பரமேஸ்வரிக்கும், மாசான காளியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...