மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 4:58 pm

DIN

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தின் பங்குத்தந்தை பாஸ்டின் சிறப்பு திருப்பலி நடத்தினாா். கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவின்போது பங்கு இறைமக்கள் சாா்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக மின்விளக்கு தோ் பவனி அக்டோபா் 1 ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது. 2 ஆம் தேதி மாலை நற்கருணை பவனியுடன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.