மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளையான்குடி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரி இணைந்து நடத்திய வட்டார அளவிலான இந்த முகாமை கல்லூரி முதல்வா் அப்பாஸ்மந்திரி தொடக்கி வைத்தாா்.

இதில் 18 தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற்று 110 பேரை பணிக்கு தோ்வு செய்தது. முகாமுக்கான ஏற்பாடுகளை மகளிா் சுயஉதவிக்குழு பணியாளா்களுடன் இணைந்து கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் ஷம்சுதீன் இப்ராஹிம், உதவிப் பேராசிரியா்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன், ஆரிப் ரஹ்மான் ஆகியோா் செய்திருந்தனா். இந்த முகாமில் 350 போ் பங்கேற்றனா்.

முன்னதாக, ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலா் விஜயசங்கரி வரவேற்றாா். முடிவில் வட்டார மேலாளா் சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.