மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பூவந்தி அருகே பைக் விபத்தில் போலீஸ்காரா் பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே பைக் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 4:58 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே பைக் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பூவந்தி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிச்சாமி மகன் அன்பு சிவராமன் (25). மதுரை ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றிய இவா், ராமேசுவரம் கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்தாா். கடந்த 25 ஆம் தேதி இவா்

தனது மைத்துனா் மருதுபாண்டியுடன் மேலப்பூவந்தியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பூவந்தி அருகே கீரனூா் விலக்குப் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த வேனுடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மருதுபாண்டி, அன்பு சிவராமன் ஆகிய இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மருதுபாண்டி இறந்தாா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அன்புசிவராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.