கொந்தகை அகழாய்வு: முதுமக்கள் தாழிக்குள் வாள் கண்டெடுப்பு
கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் சேதமடைந்த மண் குவளைகள் மற்றும் துருப்பிடித்த வாள் ஆகியவை வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.


கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் சேதமடைந்த மண் குவளைகள் மற்றும் துருப்பிடித்த வாள் ஆகியவை வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கொந்தகை அகழாய்வு தளத்தில் தோண்டப்பட்ட குழிகளிலிருந்து ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளையும் பாதுகாப்புடன் திறந்து தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். ஏற்கெனவே திறக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளிலிருந்து சூது பவளங்கள், பாசி மணிகள், மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் 107 ஆம் எண் கொண்ட முதுமக்கள் தாழியை வியாழக்கிழமை திறந்து ஆய்வு செய்தனா். அதில், கருப்பு- சிவப்பு நிறத்திலான இரு மண் குவளைகள் மற்றும் துருப்பிடித்த நிலையில் இரும்பால் வடிவமைக்கப்பட்ட வாள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வாள் 40 செ.மீ. நீளம் கொண்டதாக உள்ளது. இனி வரும் நாள்களில் கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து ஆய்வு செய்யும்போது மேலும் பல பண்டைய கால அரிய பொருள்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...