இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி திமுக நகரச் செயலாளர் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதாக பேரூராட்சி பெண் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.  
இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்!

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி திமுக நகரச் செயலாளர் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதாக பேரூராட்சி பெண் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.  

மேலும் புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இளையான்குடி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜெமிமா என்ற பெண் உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட  திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் திமுகவைச் சேர்ந்த ஜெமிமா என்ற பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு நஜூமுதீன் மீண்டும் தலைவராக வேண்டும் என்ற நோக்கில் இளையான்குடி பேரூராட்சி 13-வது வார்டில் வென்ற மிர்சா தனது பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்கனவே தோல்வி அடைந்த திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் இந்த வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் நஜ்முதீன் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க  திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக ஜெமிமாவை தலைவர் பதவியிலிருந்து விலக ஒரு தரப்பினர் வற்புறுத்தி  வருகின்றனர். ஆனால் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய ஜெமிமா மறுத்து வருகிறாராம். இதற்கிடையில் இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் ஜெமிமா 13-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற நஜூமுதீன் அதிமுக உறுப்பினர் நாகூர் மீரா ஆகிய மூவர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 15-வது வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.

கூட்டம் நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  தலைவர் ஜெமிமா செய்தியாளர்களிடம்  கூறியதாவது.
இளையான்குடி பேரூராட்சித் தலைவர்  பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தனக்கும், கணவருக்கும் நஜூமுதீன் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து திமுக மாநில தலைமையும், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் பதவியை ராஜிநாமா செய்யும் விவகாரத்தில் மாவட்ட செயலாளர் என்ன சொல்கிறாரோ அதை கேட்பதற்கு தயாராக உள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு கொலை மிரட்டல்  விடுக்கக்கப்படுகிறது. உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வராமல் தடுக்கப்படுகிறார்கள் என்றார்.

தற்பொழுது இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் இளையான்குடி நகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com