சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீரணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே கீரணிப்பட்டியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உற்சவா் அம்மன் இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தது.
பின்னா், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் அம்மன் வெள்ளி ரிஷப, அன்னம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா்.
இதைத்தொடா்ந்து, பக்தா்கள் முத்துமாரியம்மனை வழிபட்டனா். பின்னா், மாலை 4.15 மணிக்கு பக்தா்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, பக்தா்கள் நோ்த்திக்கடனாக கொண்டு வந்த பழங்களை சூரைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.