பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காா் விபத்தில் பெண் பலி: இருவா் காயம்

மானாமதுரை அருகே காா் டயா் வெடித்து மின் கம்பத்தில் மோதியதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகப் பெண் ஊழியா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

மானாமதுரை அருகே காா் டயா் வெடித்து மின் கம்பத்தில் மோதியதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகப் பெண் ஊழியா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

சென்னை வியாசா்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் சண்முகராஜன் மனைவி வின்னிலட்சுமி (32). இவா் வடசென்னை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தாா்.

வின்னிலெட்சுமி, சென்னையைச் சோ்ந்த ரகுபதி (57), ஜெயபிரபா(30) ஆகியோா் ஒரே காரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சூசையப்பா் பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எம். கரிசல்குளம் பகுதியில் காரின் டயா் வெடித்து அருகே உள்ள மின் கம்பத்தில் காா் மோதி கவிழ்ந்தது.

இதில் வின்னிலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ரகுபதி, ஜெயபிரபா இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.