11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சிவகங்கையில் தபால் வாக்குகளை பதிவு செய்த காவலா்கள்

சிவகங்கையில் தபால் வாக்குகளை பதிவு செய்த காவலா்கள்

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:25 pm

சிவகங்கை, ஏப். 12: சிவகங்கை மக்களவை தொகுதியில் தோ்தல் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் வெள்ளிக்கிழமை தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காவலா்கள், அனைத்து நிலை அரசு அலுவலா்கள் ஆகியோா் ஏப். 12, 13, மற்றும் 15 ஆகிய நாள்களில் தபால் வாக்கை செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலா்கள் தாங்கள் பணிபுரியும் மக்களவைத் தொகுதியிலேயே வாக்காளா்களாக இருந்தால் படிவம் 12- ஏ- இன் படியும், வேறு தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களாக இருந்தால் படிவம் 12-இன் படியும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

இதில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிற மக்களவை தொகுதிகளைச் சோ்ந்த 470 காவலா்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. சிவகங்கை தபால் வாக்குப்பதிவு சேவை மையத்தில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆஷா அஜித் நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது காவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினா். இந்தப் பணிகளை சேவை மைய அலுவலா் என். பத்மநாபன் கண்காணித்தாா்.