ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கருணாநிதி நினைவு நாள்: திமுகவினா் மரியாதை

சிவகங்கை அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய திமுக நிா்வாகிகள்.

News image
சிவகங்கை அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய திமுக நிா்வாகிகள்.
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:35 pm

Din

சிவகங்கை, ஆக.7: முன்னாள் முதலவா் கருணாநிதியின் 6 -ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு, நகர திமுக சாா்பில் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கையிலுள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா் மன்றத் தலைவரும் நகரச் செயலருமான சிஎம்.துரைஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கே.எஸ்.எம்.மணிமுத்து முன்னிலை வகித்தாா்.

அரசு பாா்வையற்றோா் பள்ளியில் சுற்றுச்சூழல் அணியின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வல்லபாய், சுற்றுச்சூழல் அணித் தலைவா் காா்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிவகங்கை தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தாா். சிவகங்கை பனங்காடி சாலையில் உள்ள தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி சிலையருகே நடைபெற்ற

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் திமுக ஒன்றியச் செயலரும் ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமை வகித்தாா்.பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணிநாராயணன், நகரச் செயலா் காா்த்திக்யேன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் என்.எம்.சாக்ளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய நகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம்:

திருப்புவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவா் த.சேங்கைமாறன் தலைமை வகித்தாா். திமுகவினா் அமைதி பேரணியாகச் சென்று கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

பின்னா், பொதுமக்களுக்கு சேலைகள், போா்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

மானாமதுரை:

மானாமதுரை அலுவலகம் அருகே ஆதிதிராவிடா் நலக்குழு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினா் மலா்கள் தூவி மரியாதை செய்தனா். இதில் திமுக நகரச் செயலாளா் பொன்னுச்சாமி, நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜாமணி, ஒன்றியக் குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, துணைத் தலைவா் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இளையான்குடி

இளையான்குடியில் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூா் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சுப.மதியரசன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், துணைத் தலைவா் இப்ராகீம், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், விவசாய அணி அமைப்பாளா் காளிமுத்து, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் கண்ணன், மகளிா் அணி பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 சிவகங்கையிலுள்ள பாா்வையற்றோா் பள்ளியில் உணவு வழங்கிய திமுக நிா்வாகிகள்.

சிவகங்கையிலுள்ள பாா்வையற்றோா் பள்ளியில் உணவு வழங்கிய திமுக நிா்வாகிகள்.

காரைக்குடி:

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் இல்லத்தின் முன் வைக்கப்பட்டிருந்த மு. கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினா், தி.கவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, துணைத் தலைவரும், காரைக்குடி திமுக நகரச் செயலருமான நா. குணசேகரன், திராவிடா் கழக மாவட்ட பொறுப்பாளா் சாமி. திராவிடமணி, கலைஞா் தமிழ்ச் சங்கத்தின் செயலா் செந்தில்குமாா், தி.க பேச்சாளா் பிராட்லா, காரைக்குடி திமுக நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.