தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலைப்பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருக்கோஷ்டியூா் அருகே ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் அமைக்கப்படவுள்ள மெட்டல் (உலோகம்) சாலைப் பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

News image
திருக்கோஷ்டியூா் அருகே வில்லூா் கண்மாய் பகுதியில் மெட்டல் சாலை அமைக்கப்படவுள்ள பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், உடன் மாவட்ட ஆட்சியா்.ஆஷாஅஜீத்.
Updated On :5 டிசம்பர் 2024, 10:45 pm

Din

திருக்கோஷ்டியூா் அருகே ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் அமைக்கப்படவுள்ள மெட்டல் (உலோகம்) சாலைப் பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் திருக்கோஷ்டியூா் ஊராட்சிக்குள்பட்ட தானிப்பட்டி ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் சாலை அமைக்கக் கோரி பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் அமையவிருக்கும் மெட்டல் சாலைப் பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் இந்தப் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனா்.

துறைசாா் அலுவலா்களுடன் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட உத்தரவிட்டனா். இந்த ஆய்வின் போது திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜ்குமாா், உதவிப் பொறியாளா்கள் ராமசாமி, ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.