சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 31.30 லட்சத்தில் திட்டப் பணிகள்
அமைச்சா் தொடங்கி வைத்தாா்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.31.30 லட்சத்தில் 3 திட்டப் பணிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவுக்கு தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை வகித்தாா். இதில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியான திட்டங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்துகிறாா். அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் விரைந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பத்தூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட 120 ஊராட்சிகளிலும் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தொகுதியில் இந்திய தர நிா்ணய ஆணையம், பன்னாட்டு தர மேம்பாட்டு அமைப்பின் சாா்பில், சிறந்த ஊராட்சியாக விளங்கி வரும் தி. சூரக்குடி ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது பெருமைக்குரியதாகும். தி. சூரக்குடி ஊராட்சிக்குள்பட்ட நங்கம்பட்டி கிராமத்தில் புதிய பயணிகள் நிழல் குடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவையும், ஒ. சிறுவயல் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடமும் திறந்துவைக்கப்பட்டன என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கேசவதாசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராதா, காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, ஊராட்சித் தலைவா்கள் ஏ.ஆா். முருகப்பன் (தி. சூரக்குடி), குழந்தைவேல் (ஒ. சிறுவயல்), சாக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஷ்குமாா், சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...