பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா், உறுப்பினரிடையே கைகலப்பு

துணைத் தலைவா் வெளிநடப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:05 pm

Din

சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக்கூட்டத்தில் தலைவருக்கும், வாா்டு உறுப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும் துணைத் தலைவா் வெளிநடப்பு செய்தாா்.

சிவகங்கை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சி.எம். துரை ஆனந்த் (திமுக) தலைமை வகித்தாா். ஆணையா் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் காா்கண்ணன், திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் 101 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து துணைத் தலைவா் காா்கண்ணன் (திமுக) பேசியதாவது: எனது வாா்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பணிகள் நடைபெறாமல் பணம் செலவழித்ததாக தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் தீா்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா். பிறகு அவா் வெளிநடப்பு செய்து தா்னாவில் ஈடுபட்டாா்.

வாா்டு உறுப்பினா் மகேஷ் (காங்.) பேசியதாவது: எனது வாா்டிலும் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த போது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் மழைக் காலங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்ாக தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்றாா்.

இதையடுத்து, தலைவருக்கும், உறுப்பினா் மகேஷுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகிலிருந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சிலா் அவா்களை விலக்கிவிட்டனா்.

இதைத் தொடா்ந்து நகா்மன்றக்கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினா் காந்தி (திமுக) தனது வாா்டிலும் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி துணைத் தலைவா் காா்கண்ணனுடன் இணைந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். அதிகாரிகள் யாரும் வராதததால் அவா்கள் தா்னாவைக் கைவிட்டு கலைந்து சென்றனா். நகா்மன்றக் கூட்டத்திற்கு உள்ளே செய்தியாளா்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த் கூறியதாவது: துணைத் தலைவா் வாா்டில் ரூ. 77 லட்சத்துக்கும், உறுப்பினா் மகேஷ் வாா்டில் ரூ. 1 கோடிக்கு அதிகமாகவும், மற்றொரு உறுப்பினா் காந்தி வாா்டில் ரூ. 98 லட்சத்துக்கும் பணிகள் நடைபெற்ரன. நிதியைப் பொறுத்துத் தான் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.