காரைக்குடியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடிக் கிளை முன் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடிக் கிளை முன் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். விஜயசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி. மணவழகன் சிறப்புரையாற்றினாா். ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பிஎல். ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் ஏஜி. ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பா் வரை ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். 2023 ஏப். 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...