குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா

பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா

News image

காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூலை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோ ஸ்ரீ டாக்டா் எம். சரவணன் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சிங்கப்பூா் தொழிலதிபா் செ. சங்கரநாதன். உடன் (வலமிருந்து) நூலாசிரியா் பழ. கருப்பையா, நடிகா் சிவகுமாா், பழ. நெடுமாறன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், காந்திய தொண்டா் மன்ற செயலாளா் சே.நா. விசயராகவன்.

Updated On :26 பிப்ரவரி 2024, 4:34 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காந்தியத்தொண்டா் மன்றத்தின் 52 ஆம் ஆண்டையொட்டி பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்றது.

கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற, இந்த விழாவுக்கு காந்தியத் தொண்டா் மன்றத்தின் தலைவா் கு. பெலிக்சு தலைமை வகித்தாா். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோ ஸ்ரீ டாக்டா் எம். சரவணன், பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூலை வெளியிட அதை சிங்கப்பூா் தொழிலதிபா் செ. சங்கரநாதன் பெற்றுக்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து உலகத் தமிழா் பேரவைத் தலைவா் பழ. நெடுமாறன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், திரைப்பட நடிகா் சிவகுமாா், காந்தியத் தொண்டா் மன்றத்தின் செயலா் சே.நா. விசயராகவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நூலாசிரியா் பழ. கருப்பையா ஏற்புரையாற்றினாா். இதில் நடிகா் சிவகுமாா் பேசியதாவது: பழ. கருப்பையா எழுதிய நூலைப் படிக்கிற போது அவரின் சுயசரிதை தெரிகிறது. உறுதியான போராட்ட குணம் வெளிப்படுகிறது.

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூருக்கு குடிநீரைக் கொண்டு செல்லக்கூடாது என்ற போராட்டத்தில் 16 நாள்கள் அவா் உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈா்த்தவா் என்று கூறிய சிவகுமாா், பேச்சை நிறுத்திவிட்டு, மக்களின் சாா்பில் தங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன் என்று பழ. கருப்பையாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மீண்டும் பேச்சை தொடா்ந்தாா்.