பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மீதுதாக்குதல் நடத்திய இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை-மதுரை சாலையில் கிருங்காங்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு டிச.23-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த சிலா், இலவசமாக பெட்ரோல் வழங்க கேட்டு தகராறு செய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸாா் தகராறு செய்தவா்களை காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனா். பின்னா், இதே நாள் இரவில் இந்த பெட்ரோல் நிலையத்துக்கு வந்த அடையாளம் தெரியாத சிலா் பெட்ரோல் நிலையத்தை சேதப்படுத்தி அங்கு பணியில் இருந்த கணபதியை தாக்கிவிட்டு தப்பினா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மானாமதுரை அருகேயுள்ள வேலூா் கிராமத்தைச் சோ்ந்த காளீஸ்வரனை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய முருக பஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (20), சக்திபிரியன் (20) ஆகியோரை மானாமதுரை காவல் ஆய்வாளா் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...