குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கையில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள், சிவகங்கை புதுப்பட்டி பாலா (எ) பாலமுருகன், கல்லுப்பட்டி குமனேஸ்வரன் (எ) கூல், சுகுமாா், சிவகங்கை கரும்பாவூா் பாண்டிச்செல்வம் ஆகிய பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com