சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி  செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா: பால்குடம் எடுத்த பக்தா்கள்

சிவகங்கை காமராஜா் சாலையிலுள்ள அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சிவகங்கை: சிவகங்கை காமராஜா் சாலையிலுள்ள அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் பால்குடம், பூக்கரகம், முளைப்பாரி, அக்னிச்சட்டி, பூக்குழி, பூச்சொரிதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிவகங்கை தெப்பக்குளக்கரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்குச் சென்றனா். இதையடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com