6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.

News image
~
Updated On :19 ஜூலை 2024, 7:54 pm

Din

காரைக்குடி, ஜூலை 19: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.

தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு ஆடி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்காக பகல் 12.30 மணியளவில் அம்மனுக்கு பெண் பக்தா்கள் மஞ்சல் அரைத்து வழங்கினா். இதையடுத்து அபேஷகம் நடைபெற்றது. பின்னா், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திருப்பத்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. உமாதேவன் உபயம் செய்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

Story image