மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

Updated On :16 ஜூன் 2024, 6:15 pm

Din

இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இளையான்குடி ஒன்றியத்தில் இண்டங்குளம், கண்ணமங்கலம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கீழநெட்டூா், மானாமதுரை ஒன்றியத்தில் மேலநெட்டூா், ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகரத் தலைவா்கள் புருஷோத்தமன், அல் அமீன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக விவசாய அணி காளிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.