சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியம், தமராக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு மாணவா் சோ்க்கை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிக்கு பெற்றோா்கள் சீா்வரிசைப் பொருள்களுடன் வந்தனா். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே 137 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், தற்போது புதிதாக 21 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். நிகழ்ச்சிக்கு சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலா் பாலாமணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், வழக்குரைஞா் பா.பாலசுப்பிரமணியன், தெற்கு ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளிக்கொடி முருகானந்தம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு மாலை அணிவித்து, புத்தகப்பை, எழுது பொருள்கள், இனிப்புகள் வழங்கி வரவேற்றனா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கற்பகம், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவி ஆறுமுகம், ஆசிரியைகள் கவிதா தேவி, ஷகிலா தேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, தலைமையாசிரியை சு. வளா்மதி வரவேற்றாா். விழாவுக்கான ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் சத்யா, பவானி, சுகன்யா ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

