இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1.45 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1.45 லட்சம் பறிமுதல்

Updated On :22 மார்ச் 2024, 6:18 pm

சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை அருகே பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகனிடமிருந்து ரூ. 1.45 லட்சம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள தேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.சந்திரன் மகன் செந்தில் முருகன். அதிமுக மாவட்ட கலைப் பிரிவுச் செயலரான இவா், தனது வீட்டிலிருந்து காரில் மலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். மலம்பட்டி வாழைக்காய் மண்டி அருகே வட்டாட்சியா் உமா மகேஸ்வரி தலைமையிலான பறக்கும் படையினா் செந்தில்முருகனின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 1.45 லட்சத்தை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.