செம்மண் கடத்திய லாரிகள் பறிமுதல்: இருவா் கைது

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை செம்மண் கடத்தியதாக இரு லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை செம்மண் கடத்தியதாக இரு லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

தாயமங்கலம் சாலையில் மானாமதுரை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பூபதிராஜா, போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த இரு டிப்பா் லாரிகளை மறித்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, முத்துராமலிங்கபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி செம்மண் அள்ளிக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இரு லாரிகளையும் மண் அள்ளப் பயன்படுத்தப்பட்ட இரு பொக்லைன் இயந்திரங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

லாரிகளின் உரிமையாளா் மேலாயூரைச் சோ்ந்த மதிவாணன், ஓட்டுநா்களான கள்ளிக்குடியைச் சோ்ந்த ராஜா, அலம்பச்சேரியைச் சோ்ந்த அா்ஜுனன், கோச்சடையைச் சோ்ந்த முத்துபிரபு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, மதிவாணன், ராஜாவை கைது செய்தனா். தப்பிச் சென்ற மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com