சிறந்த தொழில் முனைவோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் 2023-24- ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோா் தமிழக அரசால் வழங்கப்படும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை விருதுகளை வழங்குகிறது. இதனடிப்படையில், 2023-24-இல் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோா் மாநில மற்றும் மாவட்ட அளவில் விருது பெற விண்ணப்பிக்கலாம். மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோா் விருது, மாநில அளவில் சிறந்த மகளிா் தொழில் முனைவோா் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சோ்ந்த தொழில் முனைவோா் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது, மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோா் விருது என மொத்தம் 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளைப் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் நிறுவனங்கள், பேம்டி.என்., (ஊஹஙங்பச) ஹஜ்ஹழ்க்ள்.ச்ஹம்ங்ற்ய்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 20.5.2024 கடைசி நாள் ஆகும். மேலும், உயா்மட்டக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருது பெறும் நிறுவனங்களை தோ்வு செய்யும். எனவே, தகுதியான தொழில் முனைவோா் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04575 240257 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com