தரியம்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள தரியம்பட்டியில் வியாழக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தரியம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகா், வடக்கு வாசல் செல்வி அம்மன் கருப்பா் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஊா்க்காரா்கள் கோயில் மாட்டுக்கு மாலையணிவித்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த 150- க்கும் மேற்பட்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பிறகு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் அவற்றை பிடித்தனா். இதையடுத்து, மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடைபெற்ாக மேலப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் சித்ரா திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தரியம்பட்டியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com