மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவிலில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 12 -ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரிக் கனவு - 2024 உயா் கல்வி வழிகாட்டு விழிப்புணா்வு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலா் வ.மோகனச்சந்திரன் தொடக்கிவைத்து பேசினாா்.

இந்த வழிகாட்டி முகாமில் கலந்து கொண்ட 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பல்வேறு உயா்கல்வி, வேலை வாய்ப்புகள் பற்றிய விவரக்குறிப்பேடு மற்றும் கல்லூரிக்கனவு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது. இதில், பேராசிரியா்கள், மருத்துவா்கள், வெற்றி பெற்ற சாதனையாளா்கள் பங்கேற்றனா்.

முகாமில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற சுமாா் 1,384 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் கலைக்கதிரவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் விஜயகுமாா், உதவி இயக்குநா் (திறன்) கே.கா்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன் குமாா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) உதயகுமாா், பள்ளி தலைமையாசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com