

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள சூரக்குடியைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி அஞ்சலி (27). இவா் கோவை மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி
6 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லையாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அஞ்சலி தனது கணவருடன் பங்கேற்றாா்.
அப்போது, இந்தத் தம்பதி இடையே குழந்தையின்மை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஞ்சலி தனது வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காளையாா்கோவில் போலீஸாா் அங்கு சென்று அஞ்சலியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
ராஜபாளையத்தில் சிறுவன் தற்கொலை
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

