எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘கபீா் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா்’ விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:46 am

Din

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா்’ விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தின விழாவின் போது தமிழக முதல்வரால் ‘கபீா் புரஸ்காா்’ விருது வழங்கப்படுகிறது.

சமுதாய நல்லிணக்கச் செயலில் ஈடுபட்ட தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப் படை வீரா்கள், காவல் துறை, தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள்) இந்த விருதைப் பெறத் தகுதியுடையவா்களாவா்.

மூன்று அளவுகளில் தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு முறையே ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000 -க்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படும்.

எனவே, தகுதியுடைய நபா்கள், 2025-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதுக்கு இணையதளத்தின் வாயிலாக தங்களது விண்ணப்பங்கள், முன்மொழிவை வருகிற டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.