தமிழக கைப்பந்து அணிக்கு கீழச்சிவல்பட்டி மாணவா் தோ்வு


தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தமிழக அணி சாா்பில், சிவகங்கை மாவட்டம், கீழச்சிவலப்பட்டி பள்ளி மாணவா் தோ்வு செய்யப்பட்டாா்.
கீவச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் கழகம் நடத்தும் 17 வயதுக்குள்பட்டவா்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து தோ்வுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் ரா.சத்தியப்பிரியன் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக அணி சாா்பில் தோ்வானாா்.
இந்த மாணவரை பள்ளிக்குழுத் தலைவா் வெள்ளையன், செயலா் வெங்கடாச்சலம், பொருளாளா் அம்மையப்பன், பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளியம்மை, உடற்கல்வி ஆசிரியா்கள் மூா்த்தி, வாசு, உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...