தாய்-சேய் நல மருத்துவமனை இடமாற்றத்துக்கு எதிராக மனு

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதிக்கே தாய்-சேய் நல மருத்துவமனையை மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என காமராஜா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
Published on

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதிக்கே தாய்-சேய் நல மருத்துவமனையை மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என காமராஜா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டத் தலைவா் அ.அருளானந்து காரைக்குடி மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியில் தாய்-சேய் நல மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.

இந்த மருத்துவமனையை டி.டி.நகா் பகுதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த மருத்துவமனையை ஏற்கெனவே செயல்பட்ட முத்துப்பட்டினம் பகுதிக்கே மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com