சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ.17 கோடி வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் ரூ.17.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருமான ஆா்.லால்வேனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:12 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் ரூ.17.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருமான ஆா்.லால்வேனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் முன்னிலையில் அவா் இந்த ஆய்வில் ஈடுபட்டாா். திருப்புவனம் பேரூராட்சியில் ரூ.16.52 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மடப்புரம் கிராமத்தில் ரூ.8.40 லட்சத்தில் சமுதாய மயானத்தில் நடைபெறும் காத்திருப்போா் அறை, சுற்றுச் சுவா் கட்டுமானப் பணிகள், தூதை கிராமத்தில் ரூ.18.42 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள், திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலைப் பள்ளியில் ரூ.98 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள், மழவராயனேந்தல் ஊராட்சி, செம்பரயநேந்தல் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயனாளியின் இல்லம் கட்டுமானப் பணிகள் ஆகியன குறித்தும் லால்வேனா ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தேவையான நிதி நிலை ஆகியன குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளின் வருகை குறித்த பதிவேடுகள், மருந்து இருப்பு, தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி மாநகராட்சி மேயா் முத்துதுரை, காரைக்குடி மாநகராட்சி ஆணையா் சித்ரா, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.