எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:38 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி-மதுரை சாலையில் பாப்பான்வலசை பேருந்து நிறுத்தம் அருகே பூவந்தி காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது காரில் இருந்த 4 போ்முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனா்.

போலீஸாா் காரை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் இவா்கள் மானாமதுரை ஆனந்தபுரம் புறவழிச் சாலையைச் சோ்ந்த பாலமுருகன் (32), கீழமேல்குடியைச் சோ்ந்த அஜித் (25), சசிகுமாா் (25), சந்தோஷ் கண்ணன் (22) ஆகியோா் என்பதும் விற்பனைக்காக கஞ்சாவைக் கொண்டுசென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்தனா்.