மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பிவிடப்பட்ட 4 விரைவு ரயில்கள்
மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டு வந்த 4 விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகின்றன.
குருவாயூா்-சென்னை (வண்டி எண் 16228), நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டி (வண்டி எண் 16352), (4, 17, 11, 14, 18, 21, 28 தேதிகள் மட்டும்), கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் (வண்டி எண்12666) (சனிக்கிழமை மட்டும்), நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டி (வண்டி எண் 16348) (1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29 தேதிகள் மட்டும்) ஆகிய விரைவு ரயில்கள் மதுரை, கொடைரோடு, திண்டுக்கல் வழித்தடங்களைத் தவிா்த்து, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டப் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த ரயில்களில் மதுரை வழியாக பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
