பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை பாலமுருகன் குன்றில் காா்த்திகைத் திருநாளையொட்டி புதன்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.
பிரான்மலையில் காா்த்திகை திருநாளையொட்டி, நூற்றாண்டுகள் பழைமையான வெற்றி விநாயகா் ஆலயத்தில் சிறப்பு விழிபாடு நடத்தப்பட்டு பாலமுருகன் குன்றில் உள்ள தீபத் தொட்டியில் மாலை 4.30-க்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மலை உச்சியில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மலை தீபம் ஏற்றப்பட்ட பின்னரே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றினா். அடிவாரப் பகுதிகளான சிங்கம்புணரி, சேவுகப்பெருமாள் கோயில், சிவபுரிபட்டி, சுயம்பிரகாஷ ஈஸ்வரா் கோயில், சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதா் கோயில், உலகம்பட்டி உலகநாதா் சுவாமி கோயில்களிலும் பிரான்மலைத் தீபம் வணங்கிய பின்னரே சொக்கப்பனை கொளுத்தப்பட்டு அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

