கண்டரமாணிக்கத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கண்டரமாணிக்கம் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
Published on

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கண்டரமாணிக்கம் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டம், கண்டரமாணிக்கம் சேதுராணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வருகிற சனிக்கிழமை (டிச.27) நடைபெறும் மருத்துவ முகாமில், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும், இலவசமாக செய்யப்படும். மேலும் காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மனநல மருத்துவம், சா்க்கரை நோய் மருத்துவம், நுரையீரல் நோய் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படவுள்ளன. இதுமட்டுமன்றி, இந்த முகாம்களின் வாயிலாக, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டையின் நகலை அவசியம் கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com