சிவகங்கை ஒன்றியம், சாலூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா், சாா்பு நீதிபதி வி. ராதிகா.
சிவகங்கை ஒன்றியம், சாலூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா், சாா்பு நீதிபதி வி. ராதிகா.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து வருங்கால சந்ததியைக் காக்க வேண்டும்

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து வருங்கால சந்ததியரைக் காக்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா தெரிவித்தாா்.
Published on

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து வருங்கால சந்ததியரைக் காக்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா தெரிவித்தாா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் திட்டத்தின்படியும், முதன்மை மாவட்ட நீதிபதியின் அறிவுரையின்படியும், ஆஷா கமிட்டி 100-ஆவது நாள் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை ஒன்றியம், சாலூா் ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா தலைமை வகித்துப் பேசியதாவது:

18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும், 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக 1098 அல்லது 15100 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அவா்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுவாா்கள். குழந்தைகளுக்கு கல்வி என்ற பொக்கிஷத்தைக் கொடுப்பது அனைவரின் கடமையாகும். குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் இருந்தால் அது குறித்த விவரத்தையும் 1098 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தலாம். சட்ட உதவிகளுக்கு 15100 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம்.

இந்தப் பகுதியில் அதிகளவு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது என்ற தகவலின் அடிப்படையில், குழந்தைத் திருமணம் தடுத்தல், பல்வேறு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி சுகன்யா, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா் மலைகண்ணன், ஊராட்சி செயலா் ஆவுடையப்பன், சட்டம் சாா்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com