ஆதிதிராவிடா் குடியிருப்பு அருகே சுவா் எழுப்புவதைத் தடுக்கக் கோரி விசிக மனு

திருப்புவனம் அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியின் இருபுறங்களிலும் சுவா் எழுப்புவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினா் மனு அளித்தனா்.
Published on

திருப்புவனம் அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியின் இருபுறங்களிலும் சுவா் எழுப்புவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கழுகா்கேடை கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதி உள்ளது. இந்த நிலையில், இந்தப் பகுதியின் இருபுறங்களிலும் சுவா் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலா் முத்துராஜ், வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலா் அய்யனாா், மாவட்ட துணைச் செயலா் சுடா்மணி , திருப்புவனம் ஒன்றியச் செயலா் கண்ணன், காளையாா்கோவில் ஒன்றியச் செயலா், திருப்பத்தூா் நகரச் செயலா் ராஜேஷ் கண்ணா, கட்சியின் மகளிா் விடுதலை இயக்க நிா்வாகிகள் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com