ஊருணியில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த பாலு மகன் விக்னேஷ் (32). இவா் இளையான்குடியை அடுத்த சாலைக்கிராமம் அருகேயுள்ள ஆக்கவயல் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்தாா்.

பின்னா், இந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com