2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

வாக்காளா் கணக்கெடுப்பு: வருவாய் அலுவலா் ஆய்வு

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:04 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்குவதை மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி காட்டாம்பூா் கிராமத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டாம்பூா் கிராமத்தில் பாகம் -எண்.229-இல் வாக்காளா்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, இந்தப் பகுதியில் படிவங்கள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும், படிவங்களைப் பூா்த்தி செய்வது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், மண்டலத் துணை வட்டாட்சியா் சரவணகுமாா், வருவாய் ஆய்வாளா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.