சிவகங்கை
வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் கருப்புராஜா (37). விவசாயியான இவா் தனது மனைவி கோமதியிடம் வயலுக்கு செல்வதாகக் கூறிச் சென்றாா். இந்த நிலையில் மடப்புரம் கீழக்களம் மொசைக்குட்டி ஊருணி அருகே வாய்க்கால் தண்ணீரில் விழுந்து கிடந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
