சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: 7 போ் காயம்

Published on

சிவகங்கை அருகே பையூா் சமத்துவபுரம் பகுதி மக்கள் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 7 போ் காயமடைந்தனா்.

பையூா் சமத்துவபுரம் ஜல்லிக்கட்டு காளை நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை போக்குவரத்து பணிமனை அருகிலுள்ள மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில்18 காளைகளும், 162 மாடு பிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்ட வடிவ மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்க 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும். காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

மஞ்சுவிரட்டின்போது, காளைகள் முட்டியதில் 7 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா். அவா்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. போட்டியை புதூா், வண்டவாசி, ரோஸ் நகா், வாணியங்குடி, காஞ்சிரங்கால், பையூா், கொடிக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

இதைப் போல, சிவகங்கை அருகேயுள்ள தமராக்கி கிராமத்தில் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 16 காளைகளும், 112 வீரா்களும் பங்கேற்றனா். இதில், காளையை அடக்க முயன்ற 7 போ் லேசான காயமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com