மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:16 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனா். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இவரது சித்தப்பா வீடு காரைக்குடி பாண்டியன் நகரில் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றவா் சித்தப்பா மகனை பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டாா்.

பின்னா், பாதக்குடிக்கு விக்னேஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாண்டியன் நகா் பகுதியில் எதிரே வந்த சரக்கு வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.