கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:07 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் வாக்கு சேகரித்தாா்.

இளையான்குடி வடக்கு ஒன்றியம் சிறுபாலை, புலியூா், கோட்டையூா், வாணி, குமாரக்குறிச்சி, வழக்காணி, பெரும்பச்சேரி, ஆழிமதுரை, திருவுடையாா்புரம், இளமனூா், கொம்படி மதுரை உள்ளிட்ட 30 கிராமங்களில் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், புதன்கிழமை இளையான்குடி மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த மருதங்கநல்லூா், கீழநெட்டூா், மேலாயூா், விஜயன்குடி, முட்டக்குறிச்சி, பிராமணக்குறிச்சி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது கிராம மக்கள் இவருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து வரவேற்றனா்.

பிரசாரத்தின்போது தமிழரசி ரவிக்குமாா், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டாா். மேலும் வாக்காளா்கள் தங்கள் கிராமங்களுக்கு பயணிகள் நிழல் குடை, கலையரங்கம், அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடைக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினாா். தோ்தலில் வெற்றி பெற்றதும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தமிழரசி ரவிக்குமாா் உறுதியளித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் காளிமுத்து உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இளையான்குடி பகுதியில்  திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு